கோவை அருகில் ஈஷா மையத்தை நிறுவி நடத்தி வருகிறவர் சத்குரு,
இதன் வழியாக பெரிய அளவில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டு உதவிகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட நித்யானந்தா அளவுக்கு பெரும் சொத்து இந்த மையத்துக்கு இருக்கிறது.
இந்த நிலையில் சத்குரு தன்னுடைய கருத்தினை தமிழக அரசுக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார்.
“தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.
ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது,
அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. -.” என்பதாக கடுமையுடன் கூறி இருக்கிறார்.இதனை பிரதமருக்கு ‘டேக் ‘பண்ணியிருக்கிறார்.
இதே நேரத்தில் சத்குருவின் ஈஷா மையத்தை அரசு மேற்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.