உலகத் தமிழர்களின் நினைவில் இன்றளவும் மாறா ரணமாக வலித்துக்கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் படுகொலை!
ஈழத்தமிழர்களின் இனவிடுதலைப் போரில் அழித்தெழுத முடியாத இரத்த அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழினப்படுகொலை.
எவெரெல்லாம் சிங்களப்பேரினவாதத்துக்கு துணை போனார்களோ அவர்களெல்லாம் கரையான் அரித்த காகிதமாகிப்போனார்கள்.
என்ன செய்வது விடுதலைப்போரில் பலிகிடாவாகிப்போனார்கள் தமிழர்கள்.அந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இன்று இடித்து தள்ளியிருக்கிறது சிங்கள பேரின வாத அரசு.தங்களது கண்டனங்களை மதிமுக,நாம் தமிழர் ,அதிமுக ஆகிய அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
நினைவில் வைத்திருந்து வினாக்களை தொடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
“கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது.
சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது.
வரலாறு மாறாது.
நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?”
கேள்விகள் நியாயம்தானே?