ஐஸ்வர்யா ராஜேஷ் நல்லவர் என்பதைவிட சிறந்த நடிகை.
எந்த கேரக்டர் என்றாலும் அதில் பொருந்திப்போகிறவர்.நல்ல தமிழ் பேசக்கூடியவர்.அவருக்கு இன்று பிறந்த நாள்.
நல்வாழ்த்துகள் !
கடின உழைப்பாளி. வாய்ப்புக்காக பிறரிடம் வழிவதில்லை. கிடைத்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பதில் கொடையாளி.
இந்த பிறந்த நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளார்கள்.
‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி , தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில் தயாரிக்கபோகிறார் .
‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரானின் இசை.
கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். நாயகன் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
. ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.