காவல் துறையினருக்கு ஆளும் கட்சியினர் இடுகின்ற சட்டத்தில் இடம் பெறாத கட்டளைகளில் சுவரொட்டிகளை கிழிப்பதும் ஒன்று.
ஆட்சிகள் மாறினாலும் கிழிக்கும் பணியில் மட்டும் மாற்றங்கள் வருவதில்லை.கிழிக்கப்படும் போஸ்டர்களில் உள்ள கட்சியின் நிறங்கள் மட்டுமே மாறும்.
தற்போது கிழிக்கப்படுகிற பெருமையை மக்கள் நீதி மய்யத்தினர் அடைந்திருக்கிறார்கள்.
முதலாவது தேர்தலிலேயே கிழிபடுகிற பெறுகிற பெருமையினை மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெற்றிருக்கிறார்.
அண்மையில் கோவை சென்றிருந்த கமலின் வரவேற்பு சுவரொட்டிகளை கிழித்து கோப்பையை பெறுகிற வாய்ப்பு அந்த பெருநகரத்தின் காவல்துறைக்கு கிடைத்திருக்கிறது.
தொடரட்டும் அந்த சிறப்பு பணி .!!!
போஸ்டர் கிழிப்பு பற்றியும் , அந்த மாநகர மக்கள் அளித்துள்ள வரவேற்பு பற்றியும் கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?
“கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.
போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது.
கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன.
நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே..!”