ரசிகர்களின் அழுத்தத்தைப் பார்த்தால் ரஜினியின் உடல் நிலை அவ்வளவாக கிட்டவில்லை. வேறு எதோ ஒரு வகையான வற்புறுத்தலை தவிர்க்கவே இந்த மாதிரி நாடக மாடுகிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.
இல்லாவிட்டால் பெருமளவுக்கு ஆண்களும் பெண்களும் பெருமளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் கூடி உண்ணாநோன்பு இருந்திருப்பார்களா?
தங்களின் அன்புத்தலைவருக்கு உடல் நலம் நன்றாகவே இருக்கிறது.ஆகவே இம்மாதிரியான அறப்போராட்டம் நடத்தி அவரது கவனத்தைக் கவர்ந்தால் அரசியல் பயணம் கை கூடும் என்று நினைத்திருக்கலாம்.
“அரசியலை விட்டு விலகிவிட்டேன்.அந்த பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன்” என்று துறவறம் சென்ற தமிழருவி மணியன் கோவையில் கூடி தன்னுடைய பேரியக்கத்தை ரஜினியுடன் இணைவது என முடிவெடுப்பாரா?
ஆக ரஜினியின் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்கிற நம்பிக்கை பனிப்படலமாக படர்ந்திருக்கிறது.
தற்போது மற்றொரு செய்தி….
“அண்ணாத்த ‘படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பின்னர்தான் தொடங்கும் ..தொடரும்” என்பதே அந்த தகவல்.
ஏனாம்?
உடல்நலம் முழுமையாக தேற வேண்டும் என்பதாக குடும்பத்தார் விரும்புகிறார்கள்.
அநேகமாக அண்ணாத்த படத்துக்குப் பின்னர் புதிய படங்களை ரஜினி ஒப்புக்கொள்வாரா என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள் . ஓய்வு பெறப்போகிறார் என்றால் அவரது ரசிகர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். தவித்துப்போய் விடுவார்கள்.
ஒன்று அரசியல் இல்லையேல் சினிமா. ரசிகர்களின் விருப்பம் இதுதான் !
பார்க்கலாம் ,மாற்றம் ஒன்றுதானே மாற்றம் இல்லாதது!