இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி -அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு குழந்தைப் பேறு கிடைத்திருக்கிறது.
நேற்று மதியத்துக்கு பின்னர் அனுஷ்கா அழகான பெண் மகவை பெற்றிருக்கிறார்.
வாழ்த்து தெரிவித்து உற்றம் , சுற்றம், நட்பு வட்டத்திலிருந்து அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஒரு குழந்தையை அனுஷ்கா வைத்திருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு இதுதான் விராட்கோலி -அனுஷ்கா சர்மாவின் பெண் குழந்தை என்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆனால் இது பொய்யான போட்டோ என்று அனுஷ்கா தரப்பிலிருந்து கூறுகிறார்கள். அந்த பொய்யான போட்டோதான் இங்கே நீங்கள் பார்ப்பது.
ஆனால் பிறந்த குழந்தையின் கால்களை மட்டும் காட்டி இதுதான் அசல் போட்டோ என அனுஷ்காவின் உறவினர் ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்