நேற்று முன் தினம் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் ‘விசாரணை’ படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது மறைந்த கிஷோர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது கிஷோரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து கோலிவுட் திரையுலகினர் தாங்களாகவே முன்வந்து அவருடைய குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.2 லட்சமும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் ரூ.1 லட்சமும் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது