தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா. எனவே விஜய்யின் ‘தெறி’ படத்தை கேரளாவில் ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. இந்த நிறுவனம் நடிகர்கள் ஆர்யா, பிரித்விராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோருக்கு சொந்தமானது.
கேரளா முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.