நேற்று மதுரை அவனியாபுரத்தில் முதலாவது ஜல்லிக்கட்டு
.கிராம மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர் .மதுரை நகரில் இருந்தும் திரளான திமுக ,காங்கிரஸ் கட்சியினர் வந்து விட்டார்கள்.
இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை பார்ப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் வந்திருந்தார் .
திராவிட முன்னேற்றக்கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கே முன்னதாகவே வந்திருந்தார்.
ராகுலை குவித்த கரங்களுடன் வரவேற்ற உதயநிதியுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை பார்த்து ரசித்தார் .
ராகுல் டி சர்ட் ,ஜீன்ஸ் அணிந்திருந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் ,ஜல்லிக்கட்டை பார்ப்பதா ,அவர்கள் இருவரும் இணைந்திருப்பதை பார்ப்பதா என்கிற ஆவலில் கை தட்டி தங்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டார்கள் .
வீர விளையாட்டைப்பற்றி உதய நிதி காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு விளக்கி சொன்னார்.
“வீர விளையாட்டை பார்ப்பதற்காகவே வந்திருக்கிறேன். தமிழரின் கலாசாரத்தை பாதுகாப்பதில் உங்களுக்கு துணையாக இருப்பேன் ” என்று ராகுல் காந்தி சொன்னார்.
இவர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்ததால் தானோ என்னவோ பிரதமர் மோடி டெல்லியில் திருவள்ளுவர் திருநாளுக்கு தமிழிலேயே வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார் .
ஆனால் தமிழுக்கு எதிராக தொடர்ச்சியாக இந்தி திணிப்பு நடந்து வருகிறது. .அஞ்சல் தேர்வு ஆங்கிலம் இந்தியில் மட்டுமே வினாத்தாள்கள்.
என்ன சொல்ல!