இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் தமிழகத்தில் 90 வகையான சாதிக்காரர்களை ‘குற்றப்பரம்பரை’ என்று பட்டியலிட்டு அவர்களை கொடுமைப்படுத்திய சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் ‘குற்றப்பரம்பரை.
இந்த கதையை கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய ரத்னகுமார் எழுதியதாகவும், இந்த கதையை சிவாஜிகணேசன், சரத்குமார் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு படமாக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் நடிகர் திலகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் பாலா இந்த படத்தை இயக்க முயற்சிகள் மேற்க்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பாலாவிடம் பாரதிராஜாவே நேரடியாக பேசியதாகவும், ஆனாலும் இந்த படத்தை இயக்க பாலா உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.