நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர்.தமிழில் காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சுத்தமான தமிழச்சியாகவே மாறிப்போனார்.
இவர்களுக்கு இனியா,பிரியங்கா என அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள ஆலயங்கரடு கிராமம். இந்த தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தாலும் மாதம் ஒரு முறை தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.
அதே போல் தீபாவளி, பொங்கல் மற்றும் அந்த ஊரில் நடக்கும் திருவிழா போன்ற சமயங்களில் குடும்பத்துடன் அங்கு சென்று கொண்டாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
அங்கு நடிகை தேவயானி தனக்கு சொந்தமாக நிலம் வாங்கி அதில் விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை தேவயானி, ராஜகுமாரன் ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் சொந்த ஊரில் அவர்களது பண்ணை வீட்டின் முன்பு மண் பானையில் பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் . இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.