‘யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். இப் படத்தில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகியான சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார்.வி.இசட் துரை இயக்கத்தில்,நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுது போக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது.
‘நாற்காலி’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தனது முகாம் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் அமீரின் நடிப்பில் உருவாகி வரும்’நாற்காலி’ திரைப்படத்தின் பாடலான “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” என்ற எம்.ஜி.ஆரின் முதல் தனிப்பாடல் ஒலி குறுந்தகட்டினை வெளியிட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார்.