வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பீட்டர்பால் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் சர்ச்சைகளும் எழுந்தது. இவ் விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட் வரையிலும் சென்றது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முறிந்து போனதாகவும் , பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா கண்ணீருடன் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் வைரலானது.இதையடுத்து அடுத்த சில நாட்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய வனிதா மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்ச்சி நடந்துள்ளதால் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டார் . எனது மகள்கள் இருவரும் இவ்வுலகில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். வனிதா விஜயகுமாருடன் அவருடைய மகள் ஜெனிதா இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.