சங்கக் கட்டிடம் கட்டும் நிதி தேவைக்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது./மதுரை காலேஜ் சென்னை சிங்கம்ஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராமநாடு ரைனோஸ், கோவை கிங்ஸ், சேலம் சீட்டாஸ் இவை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் பெயர்கள். இந்த எட்டு அணிகளும் மோதும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒரு அணியில் ஆறு நடிகர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். இந்த எட்டு டீமுக்கும் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஜீவா ஆகியோர் தான் கேப்டன்கள். யார் எந்த அணிக்குத் தலைவராக இருப்பது என்பதில் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா இந்த நட்சத்திரப் போட்டிகளுக்கு விளம்பரத் தூதர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்கு ரூ 9 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல், அமிதாப் பங்கேற்கிறார்கள். முதல் போட்டியை ரஜினி பந்துவீசி அல்லது பேட் செய்து தொடங்கி வைப்பதாகவும் கூறப்படுகிறது.