இயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள திரைப்படம் ‘தலைவி’. இந்த படத்தில் பாலிவுட் பட நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்திலும், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைவி பட டீம் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கங்கனாவும் அரவிந்த்சாமியும் இருக்கும் பாடல் காட்சி புகைப்படம் அது, இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து #Thalaivi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.