ரியோ, ரம்யா பாண்டியன்,அனிதா, அறந்தாங்கி நிஷா என்ன பிரபலமான நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக களம் இறங்குவதால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதில் சற்று தாமதமானாலும் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இன்றுடன் 106 நாட்கள் முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை அடைந்து விட்டது அடுத்த சில மணி நேரங்களில் இப்போட்டியின் வெற்றியாளர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.இந்நிலையில் ஃபினாலே ஷூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் அதில் ஆரி கிட்டத்தட்ட 23 கோடி வாக்குகள் பெற்று வெற்றியாளராக மகுடம் சூடி உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடத்தில் ரன்னர் அப் வென்று 4 கோடி வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரியோ மூன்றாவது இடத்தையும் ரம்யா நான்காவது இடத்தையும் கடைசியாக ஐந்தாவது இடத்தை பெற்ற சோம் சேகரும் தற்போது வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தற்போதுபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி 5 போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில் நடிகர் ஆரி தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்
1. ஆரி – 23 கோடி வாக்குகள்
2. பாலா – 4+ கோடி வாக்குகள்
3. ரியோ – 4+ கோடி வாக்குகள்
4. ரம்யா பாண்டியன் – 3.7 கோடி வாக்குகள்
5. சோம் சேகர் – 3.2 கோடி வாக்குகள்