கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ’என்ஜிகே’ திரைப்படத்தை தொடர்ந்து,இயக்குனர் செல்வராகவன், தனுஷ் நடிப்பில்,கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ம் பாகம் என இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார். மேலும், ’சாணிகாகிதம்’ என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுடன் ஜோடி சேர்ந்து,கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் கூறியுள்ளதாவது,”’என் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கிய பாடம் எந்த சூழ்நிலை வந்தாலும் கலங்கக் கூடாது என்றும், இங்கே எதுவும் நிரந்தரமல்ல என்பதும், அதுவே கடந்து போகும் என்பதுதான் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த டுவிட் தற்போது வைரல் ஆகிவருகிறது.