ஒரு காலத்தில் பாலிவுட் திரைப்படங்கள் பல தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது.இந்திப்பாடல்களும் தமிழகத்தை ஆக்ரமித்து வந்த நிலையில் இளையராஜா வ்ருகைக்கு பின் நிலைமை அடியோடு மாறியது. அதே போல் தமிழில்மணிரத்னம் ஷங்கர்.ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட திறமை வாய்ந்த இயக்குனர்களின் வருகையால் தமிழ்த்திரைப்படங்களும் இந்தி,தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் நிலைமை உருவானது.
சமீபத்தில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காஞ்சனா திரைப்படம் அக்ஷய்குமார் நடிப்பில், லட்சுமி என்ற பெயரில் இந்தியில் வெளியானது. மேலும் கோலமாவு கோகிலா இந்தியில் குட்லெக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகி வருகிறது.. கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதியின் விக்ரம் வேதா, 2017-ல் வெளியான மாநகரம் ஆகிய படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் படமும் இந்தியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.