தமிழில், வெற்றிமாறனின் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில், வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களின் மூலம் தெலுங்கு இந்திப்பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தது. இதையடுத்து டாப்ஸி இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதே சமயம் தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக, அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்துவருகிறார், இந்தியில் தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். இப்படத்தை ஆகர்ஷ் குரானா இயக்கி வருகிறார்.இந்நிலையில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு பேட்மின்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவரை சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது குடும்பத்தினரும் அவர் காதலை ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து இருவரும் மாலத்தீவுக்குச் சென்ற வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாயின.
இந்நிலையில்,சமீபத்தில் டாப்ஸியிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ” எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னும் சில விஷயங்களை அடைய வேண்டும் என நினைக்கிறேன். அடைந்தால், வருடத்துக்கு ஐந்து, ஆறு படங்களில் நடிப்பதற்கு பதிலாக, இரண்டு மூன்று படங்கள் என குறைத்துக் கொள்வேன். அப்போதுதான் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிக்க நேரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.