கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ’மஃப்டி’ திரைப்படம் அங்கு சூப்பர் ஹிட்டடித்து வசூளையும் பெரிய அளவில் குவித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். இப்படம், ‘பத்து தல’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை, சில்லுனு ஒருகாதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.இதில், சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கும் நடிக்க, பிரியா பவானிசங்கர் தாசில்தாராக நடிக்கிறார். இவர்களுடன் ப்ரியாபவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வரும் சிலம்பரசன், அதனைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கவுள்ளார்.
இந்நிலையில்,எஸ்.டிஆர்.(சிம்பு)கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை இசைப்புயல் ரஹ்மான்தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.