இசை அமைப்பாளர் தமன் ,தெலுங்கு ,தமிழ் இரு மொழிகளிலும் பிரபலமானவர் என்றாலும் தெலுங்கில் அதிக வாய்ப்புகள்.!
ஆனால் பலர் அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
“காப்பி அடிக்கிறார். “
இதைப்பற்றி தமன் என்ன சொன்னார் முன்பு?
“இன்ஸ்பயர் ஆவதில் தப்பில்லையே.! இருந்தாலும் கவனமாக இருப்பேன்” என்கிறார்.
ஆனால் தற்போது என்ன சொல்கிறார்?
“சோசியல் மீடியாக்களில் வேலையற்ற சிலர் அம்மாதிரியாக சொல்லிவருகிறார்கள். திரைப்பட இசைத்துறையில் பலர் இருக்கிறார்கள்.நான் பாடலாசிரியர்கள்,டைரக்டர்கள் ஆகியோருடன் இணைந்துதான் வேலை பார்க்கிறேன்.
அவர்களுக்கு தெரியாதா காப்பி அடித்ததா,இல்லையா என்பது?
இசையைப் பற்றித் தெரியாதவர்கள் ,வேலையில்லாதவர்கள்,இவர்கள்தான் என்னை நோக்கி விரலை நீட்டுகிறார்கள்.
நான் ஒன்றும் திருட்டு வேலை செய்கிற ஆள் இல்லை.” என்கிறார் தமன் .