வரவிருக்கிற 2021 ஆண்டு
சட்டப்பேரவைக்கான தேர்தலில் தனித்த மெஜாரிட்டியுடன் தி.மு.க. வெற்றி பெறக்கூடும் என்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
ஐஏஎன்எஸ் சி அமைப்பினர் பல மாநிலங்களில் கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் திமுக,மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்,கேரளத்தில் இடது சாரி கம்யூ கூட்டணி வெற்றி பெறும் என்பதாக கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
பாண்டிச்சேரியில் அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு வெற்றி மதில் மேல் பூனை என கணித்திருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி வெற்றி உறுதியாக இருந்தாலும் அங்கு பிஜேபிக்கு லாபமே கிடைக்கும் .மூணே மூணு இடங்களை மட்டுமே பெற்றிருந்த பிஜேபி நடைபெறுகிற தேர்தலில் 103 இடங்களை கைப்பற்றக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 211 இடங்களை பெற்றிருக்கும் திரிணாமுல் இந்த முறை 154 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியுமாம்.
தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 162 தொகுதிகளை கைப்பற்றும் என கணிப்பின் முடிவு சொல்கிறது.மொத்த இடங்கள் 234 .
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 64 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்கிறது கருத்து கணிப்பு.
132 தொகுதிகளை கைப்பற்றியிருந்த அதிமுகவுக்கு 72 இடங்களை இழக்கக்கூடிய பேராபத்து இருப்பதாக கணிப்பில் தெரிகிறது.
கருத்து கணிப்பு என்பது அவ்வப்போது மாறக்கூடியது என்றாலும் தற்போது வெளியாகியுள்ள கணிப்பு திமுகவுக்கு மகிழ்ச்சியையும் அதிமுகவுக்கு அதிர்ச்சியையும் தரலாம்.