கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில்சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார்,தயாரிப்பா ளர் டி.சிவா,,விஜய் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில்கலந்துகொண்ட ,நடிகர் சிபிராஜ் பேசியதாவது, “கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான் கபடதாரி 28 ஆம் தேதி வெளியாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான்.கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
இந்த படத்தை ஒடிடி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே,தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன்.ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார்.
இருந்தாலும், என் உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனஞ்செயன் மூலமாகவே எனக்கு கிடைத்தது,இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.பொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும்.
இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பார்கள், இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப் என பேசினார்