ஓடிடியா…?தியேட்டரா ….?என்ற பலதத சர்ச்சைகளை கடந்து,பொங்கல் வெளியீடாக கடந்த 13ஆம் தேதி விஜய், விஜய்சேதுபதி முதன் முறையாக இணைந்து,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
அனால் இப்படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பே அதாவது,ஜனவரி 11ஆம் தேதி இரவே சுமார் 60 நிமிட காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆனது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பு இக்காட்சியை தயவு செய்து யாரும் பகிராதீர்கள் என கேட்டுக்கொண்டதுதந் வெளியான காட்சிகளை நீக்கும் நடவடிக்கையிலும் இறங்கியது. அதற்கு முன்பாகவே அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது மற்றும் தற்போது முழுப்படமும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பதெல்லாம் வேற விஷயம்.
இந்நிலையில் படக்குழு எடுத்த அதிரடியாக நடவடிக்கையில் , இந்த படத்திற்காக டிஜிட்டல் பணிபுரிந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் தான் இந்த காட்சிகளை இணையத்தில் லீக் செய்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக்க தகவல்கள் வெளியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் என்பவர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனமோ இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பது மாதிரி தெரிய வில்லை என்கிறார்கள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.