பிரமாண்டங்களாக படம் எடுத்தவர்கள் ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்ட நிலையில் இரண்டு மிகப்பெரிய ,உயரமான சிகரங்கள் இணைகின்றன என்கிறார்கள்.
சிக்கனம் என்றால் அது எங்கே விக்கிது என கேட்பவர்கள்தான் இயக்குநர் ஷங்கரும் கேஜிஎப் யாஷும் !
அவர்கள் இருவரும் இணைந்து ஒரு ஹிஸ்டாரிகள் படம் எடுக்கப்போகிறார்கள்.அதுவும் அந்த படத்துக்கான ஷூட்டிங் காலம் 4 வருடங்கள் என்கிறார்கள்.
கதையைப் பற்றி முன்னரே யாஷிடம் சங்கர் சொல்லிவிட்டாராம்.
நடிகரும் “சரி என்னுடைய அடுத்த படம் உங்களுடன்தான்” என சம்மதித்து விட்டார் என்கிறார்கள்.
ஐந்து மொழிகளில் எடுக்கப்போகிறார்கள். உலகநாயகன் கமலின் இந்தியன் 2 முடிந்த பின்னர்தான் 2022 -ல் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.
கூடுதல் சிறப்பு யாதெனில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பதுதான்!
“வில்லனா சார்?”
கதையின் போக்கு தெரிந்தால்தானே சொல்ல முடியும்! கொட்டுங்கப்பா மேளத்தை!