“இருக்கிறவன் இல்லாதவனுக்கு தான ,தர்மம் செய்யணும்னுதான்” பெரியவங்க பொதுவாக சொல்லுவார்கள்.
சாகிறபோது கூட கர்ணன் தானம் கொடுத்திட்டுத்தான் செத்தான்” என்பார்கள்.
ஏழு வள்ளல்கள் இருந்தார்கள் என்பார்கள்.
அந்த ஏழு வள்ளல்களுக்கு அடுத்து எத்தனை வள்ளல்கள் இருந்தார்கள், ஏன் அவர்களின் பெயரை வரலாறு மறந்தது என்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் சொன்னதாக நமக்கு நினைவில் இல்லை. ஞாபகமறதி ஜாஸ்தி.!
கவர்ச்சி நடிகை ஷகீலாவுக்கு தானம் தர்மம் செய்வது பிடிக்காதாம்.
ஒரு காலத்தில் வாலிப ,வயோதிகர்களுக்கு வயாகராவாக இருந்தவர் ஷகீலா.
பீமபுஷ்டி அல்வா அதிக அளவில் வியாபாரம் ஆனது இந்தம்மாவுக்காகத்தான்.!
எந்தவித சாதனைகளையும் செய்தறியாத இந்த ஷகீலா சாதித்தது வயசுப்பையன்களின் மனசை கெடுத்ததுதான்.!
இவருக்கும் பயோபிக் படம் வந்ததுதான் கொடுமை!
இவரை ஒரு ஷோவில் காமடி நடிகர் அலி என்பவர் கேட்ட கேள்விக்கு இவர் சொன்ன பதிலில் சில இங்கே!
“ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் மகள் ரேகாவிடம் ( ? ! ) ஒருதடவை கேட்டபோது ‘சாவித்திரி ரொம்பவும் நல்லவங்க.எல்லோருக்கும் தாராளமாக அள்ளி அள்ளி கொடுத்தாங்கன்னு ஜனங்க சொல்றாங்க, அப்படி கொடுத்தவங்க ஏன் அனாதை மாதிரி அரசாங்க ஆஸ்பத்திரியில் செத்தாங்க?ன்னு சொன்னாங்க.
இந்த கேள்விதான் என் நெஞ்சை முள்ளா குத்தியது.அப்படின்னா தாராளமா தர்மம் செய்றது தப்பா?
எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லாம போச்சு.அதுக்கு மோசமமான காரணங்கள் அனுபவங்கள்!” என்கிற ஷகீலாவுக்கு சிலுக்கு சுமிதாவை பிடிக்காதாம்!”