‘துக்ளக் தர்பார் ‘ என்று ஒரு படம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ,பார்த்திபன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஒரு கேரக்டரின் பெயர் ‘ராசிமான்’ என வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த பெயரானது தங்களது கட்சித் தலைவர் சீமானை குறிப்பதாக சொல்லி நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள்.
எழுத்துரிமை ,பேச்சுரிமை என உரிமைகள் மீது இந்த கட்சியினருக்கு அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது.
படம் இன்னும் வெளிவராத நிலையில் தங்களின் தலைவரைப் பற்றிதான் குறிப்பதாக சொல்லிவருகிறார்கள்.
இந்த பிரச்னை பற்றி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
அதாவது,
“நண்பர் சீமானிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார்.
ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல.
இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.
இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.
புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.
எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்” என பதிவு செய்திருக்கிறார்.
சேலம் பக்கமாக பொய்மான் கரடு என ஒரு மலை இருக்கிறது .அது பற்றி பிரபல நாவலாசிரியர் கல்கி ‘பொய்மான் கரடு என்கிற பெயரிலேயே நாவல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.