மறைந்த ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரிக்கு கொரானா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் பாசிட்டிவ் என வந்திருப்பதால் அவரை உடனடியாக கொரானா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவுடன் சேர்ந்து சசிகலாவும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்து வருகிற 27 ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்கிற செய்தி வந்த இரண்டு நாளில் காய்ச்சல் ,மூச்சுத் திணறல் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் எடுத்த சோதனை முடிவில் கொரானா நெகட்டிவ் என வந்ததாக சொல்லப்பட்டது. தற்போது பாசிட்டிவ் என சொல்கிறார்கள்.