விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போகிறவர் நெல்சன் .
இவர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் ‘படத்தை இயக்கியவர். மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யின் 65 ஆவது படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கவிருப்பவர்தான் நெல்சன்.
“நெல்சன் சாரின் தளபதி 65 படத்தின் கதை எனக்குத் தெரியும்.அந்த கதையை நெல்சன் அண்ணா என்னிடம் விவரித்தபோது மெய் சிலிர்த்திட்டேன். அந்த கதை விஜய் சாருக்குத்தான் பொருந்ததும்கிறதால கம்முன்னு இருந்திட்டேன்.
விஜய் அண்ணா மாதிரி பெரிய நடிகர்களை நடிக்கவைக்கிறதுக்கு நெல்சன் சார் சரியான ஆள்தான்.!
என்னுடைய டாக்டர் படத்தை பொங்கலுக்குத்தான் கொண்டுவரதா இருந்தேன் . ஆனா கொரானா காரணமா முடியல.ஏப்ரலில் கொண்டு வரலாம்னு பிளான் “என்பதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
டாக்டர் படத்தை அடுத்து ‘அயலான்’என்கிற படமும் வெளிவர இருக்கிறது. ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கிற புதுமையான படம்.