ஜனவரி 27 ஆம் தேதி ஜெயலலிதாவின் புதுப்பிக்கப்பட்ட சமாதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.
இதேநாளில் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச் சாலையில் இருந்து ஜெ.யின் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் விடுதலையாக இருக்கிறார்.
ஆனால் கொரானா காரணமாக பெங்களூரு மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் விடுதலையாவாரா என்பது சந்தேகம்!
இந்த நிலையில் ஜனவரி 28 ஆம் தேதி ஜெயலலிதாவின் சொந்த பங்களாவான வேதா நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தாராம்.
ஆனால் இந்த இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.யின் சொந்த அண்ணனின் மகன் தீபக் ,மகள் தீபா இருவரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில்தான் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக இம்மாதிரியான செய்திகளை முதலமைச்சர் பழனிசாமிதான் சொல்லவேண்டும் என்பார்கள்.
சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே.!