“எப்பவுமே சின்னம்மா ரெட்டை விரலைத்தானே காட்டுவாங்க..இப்ப என்ன கைய விரிச்சி கலைஞர் காட்டுற மாதிரி உதயசூரியன் சின்னத்தை காட்டுறாங்க.! சம்திங் ராங்.”
அண்ணா திமுக தொண்டர்களே இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
“யோவ்…ரெட்டை விரலை காட்டுனா அதிமுக சின்னம்னு அவங்களுக்குத் தெரியாதா ?அவரைத்தான் எடப்பாடி அண்ணன் கட்டம் கட்டிட்டாரே ! இப்ப காட்டணும்னா ஜெயில்ல இருக்கிற குக்கரை தூக்கிட்டுவந்துதான் காட்டணும்.அதுதானே தினகரனின் சின்னம்.குக்கரை தூக்கிட்டு வரமுடியாதுள்ள.. .தூக்கிட்டு வந்தா அதுக்கு வேற தனியா கேஸை போட்டுருவாய்ங்க ! அதான் பொதுவா டாட்டா காட்டுறாங்க.புரிஞ்சிக்கோ “
இப்படியாக ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது.
சின்னம்மா சசிகலா ஜெயிலில் வீல் சேரில் அமர்ந்து ஸ்கேன் எடுப்பதற்கு அழைத்துச் சென்றபோது அவர் கையாட்டிய ஸ்டில்தான் இப்படியொரு பேச்சுகளுக்கு அடிப்படை.
சசிகலா எப்படி இருக்கிறார்.?
“சிறைச்சாலை நெறி முறைப்படி அவருக்கு கொரானா நோய்க்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நன்றாக இருக்கிறார்.சுயநினைவுடன் இருக்கிறார்.”என்பதாக மருத்துவ மனை அறிக்கை கூறுகிறது.
மணிபால் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற உறவினர்களின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சசிகலாவுக்கு இரண்டாம் கட்ட சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம் ,சிறுநீரக தொற்று ,மூச்சுத் திணறல் ஆகிய உபாதைகள் இருக்கின்றன.
இதனால் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.