மத்திய பா.ஜ.க அரசும் “நீங்க எத்தனை நாளைக்குத்தான்யா முற்றுகைன்னு டெல்லியில் உட்கார்ந்திருப்பீங்க. அதையும் நாங்க பார்த்திடுறோம்” என்று விவசாயிகள் பேரணியை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருக்க விவசாயிகளும் சளைத்தவர்களாக இல்லை.
“ஓஹோ ..அப்படியா ?விடமாட்டம்யா ,ரெண்டுல ஒன்னு பார்க்காம போறதில்லை “என்று மாதங்களை கடந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிஜேபி அரசின் அரக்க பலம் ஏளனமாக பார்க்க வைத்திருக்கிறது.
விவசாயிகளின் மவுனம் எப்போது எரிமலையாக வெடிக்கும் என்பதும் தெரியாது ,அப்படியே அடங்கிப்போகுமா என்பதும் தெரியாது.
எதுவும் நடக்கலாம்.!
இப்போதுதான் விவசாயிகளின் போராட்டம் சினிமாக்காரர்களின் பக்கமாக திரும்பியிருக்கிறது. ஊடகங்களும் அறப்போராட்டத்தை கண்டு கொள்வதில்லை.
தமிழில் நயன்தாரா,யோகிபாபு நடிப்[பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.,
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில், சித்தார்த் சென்குப்தா இயக்கி வருகிறார்.,
பஞ்சாப்பில் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தபோதுதான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.. திடீர் என படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்த விவசாயிகள், “எங்களின் நியாயமான போராட்டத்தை இந்தி திரையுலகம் கண்டுகொள்ளவில்லை”.என குற்றம் சாட்டி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கலை பெரிது படுத்த விரும்பாத இயக்குநர் சித்தார்த் சென்குப்தா” உடனடியாக நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார்” என அவர்களை அமைதிப்படுத்தினார்.
இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
,ஜான்வி கபூரும், தனது சமூக வலைதள பக்கத்தில்,” விவசாயம்தான் நம் நாட்டின் இதயம். நமது தேசத்துக்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் ஆதாயமடையும் வகையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டார்.
இப்படத்தின்படப்பிடிப்பு பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா சாலையில் நடந்து கொண்டிருந்தபோதுதான் நிலைமை திசை மாறியது.
அங்கு திடீரென்று வந்த விவசாயிகள் படக்குழுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஜான்வி கபூரே திரும்பிச் செல் என்றுமுழக்கமிட்டனர்.
பெரும் பதட்டம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது
.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது .
ஜான்வி கபூர் உட்பட படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.