இயக்குனர் எழில் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’.படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஆத்மியா .
தொடர்ந்து,ராமகிருஷ்ணனுடன், போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்தார்.
இப்போது தமிழில் அவியல், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், சமுத்திரகனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவருக்குத் திடீரென திருமணம் முடிவாகி உள்ளது.கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப் பட்டுள்ளது.
சனூப் கப்பலில் பணிபுரிகிறார். இவர்கள் திருமணம் கண்ணூரில் நடந்தது.
இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.