குற்றப்பரம்பரை படத்தை யார் இயக்குவது என்பதில் நடந்த போட்டியில், பாரதிராஜா பாலாவுக்கு அல்வா கொடுத்து விட்டார் என்றே சொல்லலாம்!

ஆம்!,குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்கப் போவதாக கூறிய நிலையில், உசிலம்பட்டிஅருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் இன்று (3-4-16 )பாரதிராஜா இப்படத்தின் பூஜையை தொடங்கியுள்ளார். தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததால் அவர்களை ‘குற்றப்பரம்பரை’ என அப்போதைய பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது. அதனால், அப்பகுதிகளிலுள்ள ஆண்கள் எல்லோரும் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டாகவேண்டும். அதோடு சந்தேக நபர்கள் இரவிலும் காவல் நிலையத்திலேயே தங்கிச் செல்ல வேண்டும் பல ஆண்டுகள் நீடித்த இந்நிலையை மாற்றக் கோரி, 1912 ம் வருடம் ஏப்ரல் 3 ந்தேதி போராட்டம் நடத்திய மாயம்மா என்ற பெண் உள்பட12பேர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இச் சட்டத்தை மாற்றினார்கள்.அதே நாளில் இப்படத்தின் பூஜையை பாரதிராஜா நடத்தியுள்ளார். இந்த வரலாற்றுப்பின்னணியை வைத்து குற்றப்பரம்பரை என்கிற படத்தை இயக்கவிருப்பதாக பாரதிராஜா சில ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாவும் குற்றப்பரம்பரை படத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தை யார் இயக்குவது என்பதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறி இருக்கிறது. பாலா தரப்பில் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி கூறும்போது,’பாலாதான் குற்றப்பரம்பரை சப்ஜெட்டுக்கு உயிர் கொடுக்க முடியும். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது’ என்கிறார். இதற்கு கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, காதல் பூக்கள் போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ரத்னகுமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதே சமயம்,. பாரதிராஜாவும் பாலாவும் இதுவரை இச்சிக்கல் பற்றி எதுவும் சொல்லவில்லை . ஆனால் இயக்குநர் பாரதிராஜா, அதிரடியாக குற்றப்பரம்பரை படத்தொடக்கவிழாவை இன்று காலை உசிலம்பட்டியில் இப்படத்தின் பூஜையை நடத்தி யுள்ளார் இதற்காக,சுமார் நாற்பது இயக்குனர்கள் சென்னையில் இருந்து சொகுசு பேருந்து மூலம் சென்று . தொடக்கவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் பாரதிராஜாவுக்கும் பாலாவுக்குமான மோதல் முற்றியுள்ளது!