மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?”
“நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு என்ன? அது, தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது. தங்களுக்கு வேண்டியதைப் பெறவும், வேண்டாததைத் தவிர்க்கவும் மக்களுக்கு இருக்கும் உரிமையைச் செயற்படுத்தும் பாதையில் நகர்வோம். குடியரசு நாள் வாழ்த்துகள்”என்று கூறியுள்ளார்..