ஜனவரி 13 ஆம் தேதி விஜய்-விஜய் சேதுபதி நடித்திருக்கிற மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த இந்தப்படம் இந்த மாதமே அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை அந்த நிறுவனமே அறிவித்திருக்கிறது.
இது தொடர்பான அறிக்கையில் நடிகர்கள் விஜய் ,விஜயசேதுபதி இருவரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.”இந்தியா ,மற்றும் உலகிலுள்ள ரசிகர்கள் இந்த தளத்தின் வழியாக மாஸ்டர் படம் பார்ப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.ஜான்-பவானி இருவரும் ரசிகர்களை ரோலர் கோஸ்டரில் ரசிகர்களை அழைத்து செல்வார்கள் “என்று விஜய் கூறி இருக்கிறார்.
“வீட்டிலிருந்தே பார்க்கிற வாய்ப்பு ரசிகர்களுக்கு.!பெரும் அளவில் மக்களை சென்றடையும் “என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.