நடிகர் ரஜினிகாந்தால் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நமது தலைவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாமறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்.
இதற்கு ஈடு செய்யும் வகையில் நமது ரஜினிகாந்தின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நினைவானது, நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தின் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம். இப்ப இல்லைனா எப்போது என்று சொல்லிய ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது. நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.
தற்போது நமது தலைவர் ஒரு நடிகராக அவரது தொழில் தர்மத்தின் காரணமாக, அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக் கூடாது என்ற காரணத்திற்காக அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.
எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் ரஜினிகாந்த் தான். அரசியலில் அவர் இல்லை என்றாலும் எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகர் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அக்கரையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவரின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். மிக்க நன்றி. விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் அர்ஜுன் மூர்த்தி இவ்வாறு அவர் கூறியுள்ளார்.