வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி. விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்என்கிறது படக்குழு.