100 வருட பாரம்பரியம் கொண்ட இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சில நடிகர்களே தங்களின் ஒவ்வொரு படத்திலும் புதிய உயரத்திற்கு ரசிகர்களை அழைத்து செல்கிறார்கள். கிச்சா சுதீப் எனும் “பாட்ஷா கிச்சா சுதீப்” அந்த சூப்பர் ஸ்டார்களில் ஒருத்தர். இப்போது “விக்ராந்த் ரோனா” திரைப்படம் மூலம், அவர் தன் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளார். இந்த பொது முடக்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பெரிய பட்ஜெட் படம் “விக்ராந்த் ரோனா” ஆகும்.
இது பற்றி கூறும்போது… யாராவது ஒருவர் முதலில் கால் எடுத்து தைரியமாக முன்னிற்க வேண்டும். பலபேரின் வாழ்க்கை இந்த திரைத்துறையை நம்பி இருக்கிறது அதனால் தான் முதலில் நான் இப்படத்தை ஆரம்பித்தேன் என்றார். தைரியமாக அவர் ஆரம்பித்த இப்படத்தின் பலனாக இன்று “விக்ராந்த் ரோனா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் ஓடும் ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பெரும் கொண்டாட்டத்துடன் வெளியாகவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தை கொண்டாட துபாய் முன்வந்து பெருமை செய்துள்ளது. ஜனவரி 31 அன்று கிச்சா சுதீப் திரைத்துறையில் நுழைந்து 25 வருடம் நிறைவடைவதை ஒட்டி பெரும் கொண்டாட்டமான விழாவை முன்னெடுக்கவுள்ளது துபாய்.
இயக்குநர் அனூப் பந்தாரி கூறியதாவது….
ஒரு படைப்பாளியாக மிக சிறந்த திறமையாளர்களுடன் பணிபுரிவதையே அனைத்து படைப்பாளிகளும் விரும்புவர். கிச்சா சுதீப் மிகச்சிறந்த ஆளுமையாளர். அவர் படப்பிடிப்பில் இருக்கும்போது அவரை சுற்றி எந்நேரமும் உற்சாகம் பரவியிருக்கும். அது சுற்றியுள்ள அனைவருக்கும் தொற்றிகொள்ளும். அவருடைய அளப்பரியா ஈடுபாட்டினால் “விக்ராந்த் ரோனா” படம் பிரமாண்டமான மிகப்பெரிய படைப்பாக மாறியுள்ளது. “விக்ராந்த் ரோனா” படத்தின் டைட்டில் லோகோவை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் வெளியிடவுள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் அதைவிட கிச்சா சுதீப் அவர்களின் 25 ஆண்டில் அவருடன் பயணித்தது, உச்சபட்ச மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவரின் உழைப்பை ஸ்நீக் பீக்காக திரையில் காட்டும் விழாவை நானும் எங்கள் குழுவும் பெரும் ஆவலுடன் காண காத்திருக்கிறோம்.
தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது….
அனைவருக்குமே கடினமான இந்த பொது முடக்க காலத்தில் இத்தனை பெரிய படத்தை உருவாக்குவதே மிகப்பெரும் சாகசமான அனுபவமாக இருந்தது. நல்லவேளையாக சுதீப் அவர்கள் இப்படத்தில் இருந்தது எங்களது மிகப்பெரிய ஆசிர்வாதம். அவர் படத்தில் நடிப்பதால் மட்டுமே படம் இந்திய அளவில் மிகப்பெரும் படம் எனும் பெயரை பெற்றிருக்கிறது. 25 வருட திரைப்பட வரலாறு கொண்ட எந்த ஒரு நடிகரும் தனக்கென ஒரு தனி பாணியை கடைப்பிடிப்பார்கள். அவர்களுக்காக ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் கிச்சா சுதீப் அப்படியானவர் அல்ல. ஒவ்வொரு முறையும் திரை எல்லைகளை கடந்து, ரசிகர்களுக்காக அவர் புரியும் சாதனைகள் அளப்பரியது. அந்த வகையில் “விக்ராந்த் ரோனா” மூலம் அவர் செய்திருக்கும் பிரமாண்ட சாதனையானது பிரமிப்பானது.
பாட்ஷா கிச்சா சுதீப் கூறியதாவது…
ஒரு நல்ல குழு மட்டுமே ஒரு நல்ல நோக்குடன் ஒன்றிணைய முடியும். ஒரே நோக்குடன் கூடிய இலக்கை அடையும் எண்ணம் கொண்ட குழுவால் மட்டுமே, ஒன்றாக பயணித்து சாதிக்க முடியும். என்ன உருவாக்க நினைத்தோமோ அதனை இக்குழு திருப்திகரமான வகையில் முடித்து, திரையில் கொண்டு வந்துள்ளது. இதற்காக அனைவருக்கும் எனது அன்பான பாராட்டுக்கள். 25 வருட திரை வாழ்வு கொண்டாட்டம், “விக்ராந்த் ரோனா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் ஓடும் ஸ்நீக் பீக், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் வெளியிடப்படும் கொண்டாட்டத்துடன் இணைந்து வருவது பெரும் மகிழ்ச்சி. இந்த அளப்பரிய சாதனையை படைத்த குழுவிற்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
இப்படத்தை அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கிச்சா சுதீப் நடித்திருக்கும் “விக்ராந்த் ரோனா” திரைப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.