சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் மனைவி மற்றும மகனை கொலை செய்து 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலில் ஒருவனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.4 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தமிழக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,” வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.