அடித்தட்டு மக்களுடன் கலந்து பழகுவது என்பது நேரு குடும்பத்துக்கு வழி வழியாக வந்து கொண்டிருக்கிற பண்பு.
எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாழ்ந்த சரித்திரம் அந்த குடும்பத்துக்கு உண்டு.
அண்மையில் தமிழகம் வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிராமிய சமையல் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை மக்களுடன் அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டது வைரலாக வந்து கொண்டு இருக்கிறது.
கருப்பு பேண்டு ,நீலக்கலர் டி சர்ட் அணிந்து கொண்டு அந்த கிராமத்துப் பாதையில் நடந்து வந்த ராகுல் காந்தியை கிராமத்து சமையல்காரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
தமிழில் அவர்களுக்கு “வணக்கம்’ சொன்னார் ராகுல்.! இவருடன் கரூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி வந்திருந்தார்.