பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படம், கர்ணன். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார்.
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், நட்டி, காமெடி நடிகர் யோகிபாபு, ’96’ படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைத்து இதன் ஷூட்டிங் நடந்து வந்தது.அந்த அரங்கில் மட்டுமே சுமார் 90% படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டது படக்குழு.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ,ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, சென்னையிலேயே அரங்குகள் அமைத்து சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் உள்ள அரங்குகளில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். கடந்த டிசம்பர் 9ம் தேதி அந்தப் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில்,தற்போது இன்று கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தின் வெளியீட்டு தேதியை கர்ணன் பட புதிய டீஸருடன், நீதி சூரியனைப்[போல முளைத்தெழக்கூடியது என்ற வாசகத்துடன் வரும் ஏப்ரலில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
Elated and proud to present the release announcement teaser of #Karnan. Let the celebrations begin!#KarnanArrivesOnApril@dhanushkraja @mari_selvaraj @Music_santhosh @KarnanTheMoviehttps://t.co/4DF1p6P2Hk
— Kalaippuli S Thanu (@theVcreations) January 31, 2021