“நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…. #ஆட்டம்ஆரம்பம் #சசிகலா” என்று டிவிட்டரில் அபாய சங்கு ஊதியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
பெங்களூரு மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு திரும்புகிறபோது அதிமுக கொடி போட்ட காரில்தான் பயணித்தார்.அதுவும் அந்த கார் ஜெயலலிதா பயன்படுத்திய கார் என்பது குறிப்பிடத் தகுந்தது. வரவேற்பும் பிரமாண்டமாக இருந்தது. வழியெங்கும் ரோஜாமலர்களை தூவி அதகளப்படுத்திவிட்டனர்.
“இக்கொடியை எப்படி பயன்படுத்தலாம்”என கேட்டு அதிமுக அமைச்சர்கள் பொங்கி எழுந்தார்கள். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் என இருவரும் தற்போதுவரை எதுவும் சொல்லவில்லை.அதிமுகவினர் சற்று அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.
இதைப்பற்றி டி.டி.வி தினகரன்தான் சசிகலா சார்பில் அழுத்தமாக பதில் சொல்லியிருக்கிறார்.