தனுஷ் ரசிகர்களுக்கு கோபம் உச்சத்தில் இருக்கிறது.!
அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தியேட்டரில் வெளியிடவில்லை. மாறாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
இதனால் பஞ்சாயத்து ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று பிரசாத் லேப் பில் நடந்த ஏலே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு சசி வரவில்லை
ஒய் நாட் ஸ்டுடியோஸும் ரிலையன்சும் இணைந்து தயாரித்துள்ள வால் வாட்சரின் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
எழுத்து இயக்கம் ஹலிதா சமீம் .
ஜகமே தந்திரத்தை ஓடிடி க்கு கொடுத்திருப்பதால் தியேட்டர்கள் அதிபர்கள் சங்கத்தினரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பான பஞ்சாயத்து செவ்வாய்க்கிழமை ( 2 ஆம் தேதி.) சென்னையில் நடக்கிறது. இந்த பஞ்சாயத்துக்காக சென்னை வந்து கொண்டிருந்த தியேட்டர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரின் கார் விபத்தில் சிக்கிவிட்டது.
அவர் வேறு காரில் வந்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கத்தில் தனுஷ் ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சசியின் முடிவினை மறு பரிசீலனை செய்யும்படி டிவிட்டரை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
ஜகமே தந்திரம் சிக்கல் சமரசமுடிவுக்கு வராவிட்டால் ஏலே படமும் மாட்டிக்கொள்கிற அபாயம் இருக்கிறது.
சசிகாந்த் என்ன பண்ணப்போகிறாரோ?