வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.சிம்பு இன்று தன் 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீஸர் மதியம் 2.34 மணிக்கு வெளியாகியுள்ளது.
மாநாடு படத்தின் தமிழ் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, இந்தியில் அனுராக் காஷ்யப்பும், மலையாளத்தில் பிரித்விராஜூம், தெலுங்கில் ரவி தேஜாவும், கன்னடத்தில் நடிகர் சுதீப்பும் வெளியிட்டுள்ளனர்.
.இப்பட த்தின் டீசரை பார்க்கும் போது அரசியல் என்கிற ஒரு விஷயத்தைத் தாண்டிய மாஸ் விஷயத்தை இயக்குனர் வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. மாநாடு திரைப்படம் அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள டீசர் முழுக்க முழுக்க ‘ரீவைண்ட்’ மோடில் வெளியிடப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் 5 மொழிகளிலும் இப்படத்தின் டீசர் வெளியாகியிருப்பதை சிம்பு ரசிகர்கள் ‘வேற லெவல்’ என கொண்டாடி வருகின்றனர்.#MaanaaduTeaser என்ற ஹேஷ்டேக்கையும் சிம்புவின் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
‘மாநாடு டீசரை உலகறியச் செய்த இசையுலகின் நாயகனுக்கு நன்றி’ என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser #HBDSilambarasan #Rewind #Maanaadu #aVPpolitics @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr
— A.R.Rahman (@arrahman) February 3, 2021