சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட . சசிகலாவுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 31-ம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டில் சசிகலா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.இந்நிலையில், சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவது உறுதி என யை அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் மதுரையில் தனது அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது,”பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வருகிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள்.சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
சசிகலா தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலையான நிலையில், ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.அமமுக என்ற கட்சியை தொடங்கியுள்ளதே அதிமுகவை மீட்டெடுக்கத்தான். யார் தவறு செய்தவர்கள்? யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்.ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று பெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.