நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்.
இளையவர் பிரபு.
இவர்கள் இருவருமே சிவாஜியின் மறைவுக்குப் பிறகு எவ்வித அரசியலிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்கள்.
திரைப்பட தயாரிப்புகளிலும் இறங்கவில்லை.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்துக்கொண்டிருக்கிறார். ராம்குமாரின் மகன் தர்ஷன் தயாராகிவருகிறார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ,இயக்குநர் சீனுராமசாமி ,ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பிரபுதான் தர்ஷனின் பிரவேசம் பற்றி கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் சிவாஜி ராம்குமார் அரசியலில் இறங்குகிறார்.
பாஜகவில் சேருகிறார். இவர் வழியாக சிவாஜி ரசிகர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று நம்புகிறது பிஜேபி.
“ஏனிந்த திடீர் முடிவு?”
“திடீர் முடிவு இல்லை. முன்னதாகவே எனக்கு மோடியை பிடிக்கும். குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது ரசிகன் .
சிவாஜி ,மோடி இவர்களின் ரசிகன் நான் ! தற்போது என்னால் தீவிரமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை இருப்பதால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அப்பாவை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இழிவு படுத்தியது .அதனால் அந்த கட்சியை நம்பமுடியாது” என்கிறார் நடிகர் திலகத்தின் மூத்த மகன்.