இந்தியன் தாத்தாவுக்கு என்ன சிக்கலோ ,எழுந்து நிற்பதற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்.!
பூஜை போட்ட நேரம் சரியில்லையா ,அல்லது ராசியான கையினால் கற்பூரம் ஏற்றப்படவில்லையா ?எதுவோ ஒன்று தடையாக நிற்கிறது.
தொடர்ந்து, அடுக்கடுக்கான பிரச்சனைகளை அந்த படம் சந்தித்து வருகிறது.
முக்கிய நடிகரான கமல்ஹாசன், பிக் பாஸ், அரசியல், விக்ரம் என அடுத்தடுத்து பிசியாகி விட்டார்.
லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனை டானாக்கி விட்டது.
படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னகுமார் கூடிய விரைவில் கம்பி நீட்டப் போவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இவ்வளவு இடர்பாடுகள் குரல்வளையை நெருக்குவது போல.!
கமல்ஹாசனுடன் இயக்குநர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப் பட்டு இன்னமும் அந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கவில்லை.
சென்னையை அடுத்து பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பமானது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவ இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே கிடப்பில் போடப் பட்டன .
இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது அந்த படக்குழுவை சார்ந்தவர்களுக்கே தெரியவில்லை. பலரும் தவித்து வருகின்றனர்.
நடிகர்கள் எல்லாம் புதிய படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகின்றனர்.
இந்தியன் 2 படத்தின் நடிகையான காஜல் அகர்வால், ஒரு படி மேலே சென்று கல்யாணமே பண்ணிக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நடிக்கவிருப்பதால், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. , பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கே முடிந்து இந்த ஆண்டு ரிலீசுக்கு ரெடியாகி விடும் என்கின்றனர்.மறுபுறம் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் டான் படத்திற்கும் பூஜை போட்டு பணிகளை துவங்கிவிட்டது லைகா நிறுவனம்.
ஷூட்டிங்கை தொடங்க முடியாமல் கடும் அப்செட்டில் இருப்பது இயக்குநர் ஷங்கர் தான் என்றும் கூறுகின்றனர்..