ஒவ்வொரு ஆண்டு பிறக்கிறபோதும் மரத்தடி ஜோஷ்யரிலிருந்து ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு ரேகை பார்க்கிற ஜோஷ்யர் வரை அந்த ஆண்டின் பலன்களை கணித்து சொல்வதாக அறிவிப்பார்கள்.
ஊடகங்களும் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்.!
இன்றும் ராசி பலன் பார்ப்பதற்காகவே பேப்பர் வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் உலகத்துக்கே ஆரூடத்தைக் கணித்து விட்டுப் போயிருக்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர் டாமஸ் என்பவர்.
16 ஆவது நூற்றாண்டை சேர்ந்த இவரது உலக கணிப்பு மிகவும் பிரபலம்.
இவர் கணித்து சொல்லியபடி உலக யுத்தங்கள் நடந்திருக்கிறதாம்.!
கம்யூனிசம் பற்றிய இவரது கணிப்பு சரியாக இருப்பதாக சொல்கிறார்கள்.
ஐரோப்பாவில் நடந்த டெர்ரரிசம் ,நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப்பற்றி சொன்னவை எல்லாமே நடந்திருக்கின்றன என்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இன்னமும் பயமுறுத்திக்கொண்டிருக்கிற கொரானா பற்றியும் நாஸ்டர் டாமஸ் சொல்லியிருக்கிறாராம்.
சரி ,அவர் இந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு பலன்கள் என்னவாக இருக்கும் என கணித்திருக்கிறாராம்.?
LAND OF THE WEST என அழைக்கப்படுகிற பகுதியில் மிகப்பெரிய பூகம்ப பேரழிவு நடக்குமாம்.
அவர் குறிப்பிடுகிற பகுதி கலிபோர்னியா. அதுவும் இந்த ஆண்டு நவம்பரில் என காலத்தையும் குறிப்பிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
எதைக்குறித்தோ ஆராய்ச்சி செய்கிற சோவியத் விஞ்ஞானிகள் மிகவும் மோசமான வைரஸை கண்டு பிடிப்பார்கள். அந்த வைரஸால் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படும்.குறிப்பாக சிசுக்கள் மரணம் அதிகமாக இருக்கும். The Disease makes them Monster என்றும் குறிப்பிடுகிறார்கள்.
உலகில் இரு பெரிய மதங்களிடையில் மோதல் நடக்குமாம்.
இப்படி ஆபத்துகளை சொல்லி வந்த அந்த உலக ஜோதிடர் முக்கியமான ஆருடமும் சொன்னதாக சொல்கிறார்கள்.
அது என்ன?
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சோவியத் ருஷ்யா ,சீனா ஆகிய நாடுகளும் இணைந்து ,இணக்கமாக செயல்படுமாம்.
அந்த நாடுகளின் முயற்சியினால் அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொடிய நோயான கேன்சருக்கு தீர்வு கண்டுபிடிக்கப்படும்.
புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்தால் அது உலகத்துக்கான மிகப் பெரிய நன்கொடைதானே!