தினேஷ் (உதய்), தீப்திஷாதி (ஸ்வாதி),மொட்ட ராஜேந்திரன்( மிஸ்டர் லவ் ), ஆதித்யா கதிர் (நீலகண்டன்), விகாஷ் சம்பத் (பூங்குன்றன்), செல்வேந்திரன் (சிவராம கிருஷ்ணா கோவிந்த நாராயணன்), மனோபாலா (நாகன் அப்பா), ரமா ( நாயகன் அம்மா )
ஒளிப்பதிவு கே..ஆனந்தராஜ் .இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் – கபிலன் வைரமுத்து. எடிட்டிங் – ஆண்டனி ஸ்டண்ட் – கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ் ,கலை இயக்குனர் – ஆண்டனி .நடனம் – சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –ஆர் .கோபி.
*****************
சிறு ,குறு படங்களுக்கு முன்னுரிமை கொடுங்க என்கிற போராளிகளுக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.! குறிப்பாக தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு!
எந்த போதி மரத்தடியில் உட்கார்ந்திருந்தாரோ கதாசிரியர் -இயக்குநர் ஆர்.கோபி.!அப்படியொரு கற்பனை. டாட்டூ போடுகிற ஷாப் வைத்திருக்கிற தினேஷுக்கு நயன்தாரா மாதிரியான பெண் வேண்டுமாம். பல பேர் இப்படி அலைகிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக கடையை வித்து கடன் வாங்கி லண்டன் வரை போவாய்ங்களா? அதுவும் அந்த பொண்ணு சம்மதிக்காத நிலையில! இப்படியொரு கதாநாயகனாக நடிப்பதற்கு தினேஷை தேர்வு செய்தது கரெக்ட்.
இன்னும் எத்தனை படத்தில் நடித்தாலும் அதே பார்வை ,அதே மாடுலேஷன் என மாற்றமே இல்லாதவர். வசனங்களை வாய்க்குள்ளேயே சொல்லிக்கொள்வதை மாத்துங்க ப்ரோ!
90களில் வாழ்ந்தவர்களை பற்றிய பிரதிபலிப்பு என்பதாக சொல்லி டபிள் மீனிங் டயலாக்ஸ் !ரசிச்சு சலிச்சு போச்சு பாஸ்.! தினேஷுக்கு நண்பர்கள் என 3 பேரை படம் முழுக்க அலைய விட்டிருக்கிறார்கள். என்ன பலன்?
தீப்தி என்கிற ஓங்குதாங்கான நாயகி. ஸ்வாதியாக நடித்திருக்கிறார்.காட்டினால் போதும் ,நடிப்பதெல்லாம் வேஸ்ட் என்கிற பாலிசி போலும்.!அட போம்மா! பெரிய பெரிய ஜிம்பாலக்கிடியெல்லாம் பார்த்தவங்கதான் எங்க ரசிகர்கள்.!
லண்டனில் ரேடியோ ஜாக்கியாம் மொட்டை ராஜேந்திரன்.என்னத்த சொல்ல!
லண்டனுக்கெல்லாம் போயிருக்காங்க! யாரோட ஆசையோ தெரியல.!
நானும் சிங்கிள்தான்! இருந்திட்டு போ ,மிங்கிள் ஆகி என்னத்த ஆகப்போவுது?